தமிழ்நாடு

பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2023-08-06 04:46 GMT   |   Update On 2023-08-06 04:46 GMT
  • நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது.
  • வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேற்குத்தொடர்ச்சிமலை பகுதியான திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் மூலிகைகள் கலந்து குளிர்ந்த நீராக விழும் அருவியில் குளித்து மகிழ பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதனால் கடந்த 3 மாதமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தோணியாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News