தமிழ்நாடு (Tamil Nadu)

காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சி: எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்த உதயநிதி

Published On 2024-06-10 11:01 GMT   |   Update On 2024-06-10 11:01 GMT
  • நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டுகளித்தோம்.
  • கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.

இந்நிலையில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியின் சிறப்புகளை தனது எக்ஸ் தளபதிவில் கூறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

சென்னை முதல் குமரி வரை நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்வை நம் கண் முன் விரிக்கும் 'காலம் உள்ளவரை கலைஞர்' நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டுகளித்தோம்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மெழுகு சிலை செல்ஃபி பாயின்ட், Virtual Reality தொழில்நுட்பத்துடன் கூடிய கலைஞர் அவர்களின் குறும்படம், அவரது வாழ்க்கையை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சி ஆகியவை கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கண்காட்சியைக் கண்கொள்ளா காட்சியாக, சிறப்புற ஏற்பாடு செய்த சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்! என்று கூறியுள்ளார்.


Tags:    

Similar News