தமிழ்நாடு

வரும் பிப்ரவரிக்குள் அனைவரும் ஒன்றிணைவது உறுதி- வைத்திலிங்கம்

Published On 2024-09-15 06:37 GMT   |   Update On 2024-09-15 06:37 GMT
  • அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.
  • 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.

என்னைவிட அ.தி.மு.க. வரலாறு பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. சிலர் அவர்களின் கருத்துக்களை கூறலாம். அ.தி.மு.க பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.

அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒன்று இணையும் என முன்பு கூறியிருந்தேன். ஆனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கண்டிப்பாக ஒன்றிணையும். 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. நான் கட்சி வேஷ்டி கட்டுகிறேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News