தமிழ்நாடு
வீராணம் ஏரி 47.5 அடி முழு கொள்ளளவை எட்டியது- அமைச்சர் நேரில் ஆய்வு
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாளை முதல் தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி வருகின்றது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு 46 அடி அளவில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளவான 47.5 அடி அளவில் தண்ணீர் முழுமையாக நிரம்பியது.
இந்த நிலையில் இன்று காலை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாளை முதல் தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.