வேங்கை வயல் விவகாரம்: விசாரணை அதிகாரி மாற்றம்
- 147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
- வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால்பாண்டி மாற்றப்பட்டுள்ளார். புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா தத்தை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.