தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா?- தமிழக அரசு விளக்கம்

Published On 2024-09-05 02:21 GMT   |   Update On 2024-09-05 02:21 GMT
  • விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
  • தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.

சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனை தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இது பொய்யான செய்தி என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டாடும் பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும் என்றே பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். இதை திரித்து அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாக பரப்பி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News