சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும்- மு.க ஸ்டாலின்
- சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.
- கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், மறைந்த சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பிறகு அவர் உரையாற்றியதாவது:-
சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டே இருந்தேன்.
சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.
கருணாநிதி ஆட்சியின்போது கோவையில் நடந்த மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேசினார். கருணாநிதி இல்லாமல் தமிழ்நாடு இல்லை என பேசியவர் சீதாராம் யெச்சரூரி.
கருணாநிதி எழுதிய தாய் காவியம் குறித்து புகழ்ந்து பேசியவர். சீதாராம் யெச்சூரி பேச்சுக்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்தார். நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி.
கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.
சீதாராம் யெச்சூரி சிரிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.
தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியின்போது இடதுசாரி பங்கில் யெச்சூரியே முக்கிய காரணம்.
இடது சாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்தவர். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்க முக்கிய காரணமானவர். தற்போது, பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாகவும் முக்கியமாக இருந்தவர். இளைய சமூதாயத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியவர்.
சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.