வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
- இன்று சென்னையில் எங்கும் பரவலாக மழை பெய்யவில்லை.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று சென்னையில் எங்கும் பரவலாக மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில், வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வானிலை முன்னறிவிப்பு ரெட் அலர்ட் வழங்கியிருந்தது. ஆனால், இன்று மாலை வரை ஒரு சொட்டு மழை கூட இல்லை. அரசும், மக்களும் தயாராக இருக்க வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.