தமிழ்நாடு

இந்தியா முழுவதும் 'கூல் லிப்'-ஐ ஏன் தடை செய்ய கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

Published On 2024-09-12 11:49 GMT   |   Update On 2024-09-12 11:49 GMT
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர்.
  • போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் என்பபடும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News