- ஆட்டிசத்தை தவிர்க்க வேண்டும் என்றால் கர்ப்ப காலத்தில், பெண்கள் மன இறுக்கம் அடையக் கூடாது.
- நரம்பு, மூளை மண்டலத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மூலமாக ஆட்டிசம் உருவாகிறது
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. மன இறுக்கம் கொண்டவர்களை ஏற்றுக்கொள்வது, ஆதரவளிப்பது மற்றும் சேர்ப்பது மற்றும் அவர்களின் உரிமைகளை ஆதரிப்பது பற்றிய உலகளாவிய சுகாதார நிகழ்வு இந்நாளின் நோக்கம்.
2008-ஆம் ஆண்டு முதல், ஐ.நா. சபை ஏப்ரல் 2 -ந் தேதியை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் 'உலக ஆட்டிசம் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. சமீப ஆண்டுகளாக இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன இறுக்கத்தை புரிந்து கொண்டு அவர்களை பராமரிப்பு செய்வது நமது கடமை. மூளை வளர்ச்சி குறைபாடு காரணமாக ஆட்டிசம் பெரும்பாலும் உருவாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சமூக தொடர்புகளில் சிக்கல்கள், தடை ஏற்படுகிறது.
ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை, செயல்பாடுகளில் எளிதில் வித்தியாசம் தெரிந்துவிடும். இதனால் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவாற்றல், கற்றல் தன்மை குறைகிறது. ஆஸ்திரேலிய டாக்டர் ஜூடி சிங்கர் இது குறித்து ஆய்வு நடத்தி உள்ளார்.
நரம்பு, மூளை மண்டலத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மூலமாக ஆட்டிசம் உருவாகிறது. கர்ப்பிணி பெண்களின் மன இறுக்கத்தால், பிறக்கும் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கின்றன. இதனால் அந்த குழந்தைகள் சமூகத்தில் புறந்தள்ளும் நிலை ஏற்படுகிறது
ஆட்டிசத்தை தவிர்க்க வேண்டும் என்றால் கர்ப்ப காலத்தில், பெண்கள் மன இறுக்கம் அடையக் கூடாது. மூளை, நரம்புகள் வளர்ச்சி பெற கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் உரிய சத்தான உணவுகள் எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
எனவே இந்நாளில் ஆட்டிசம் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது ஒவ்வொருவரின் கடமை.