புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
- நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றம்:
புழல் சிறையில் தண்டனை கைதிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி தண்டனை சிறையில் இருக்கும் கைதி ஒருவரை சந்திக்க, சென்னை, அண்ணாநகரை சேர்ந்த நவீன் குமார்(24) என்பவர் வந்தார். அப்போது அவர் தின்பண்டங்களை பையில் கொண்டு வந்தார். சந்தேகம் அடைந்த சிறை போலீசார் அந்தப் பையை சோதனை செய்தனர். அதில் 10 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் நவீன் குமார் அந்த கஞ்சாவை தண்டனை சிறையில் இருக்கும் நண்பரான கோபி நாத் என்பவருக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புழல் சிறையில் சிறை காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது உயர் பாதுகாப்பு பிரிவு அறை அருகே கேட்பாரற்று கிடந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு வழக்கில் கைதாகி 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திவசந்தகுமார் என்பவரிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஜெயிலுக்குள் கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.