தமிழ்நாடு

சிறுவனை தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருவதை படத்தில் காணலாம்.

பவானி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் மாயம்- தேடும் பணி தீவிரம்

Published On 2023-09-19 07:14 GMT   |   Update On 2023-09-19 07:14 GMT
  • சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை.
  • போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் 3.5 அடி கொண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

அதன் பிறகு இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் இரவு ஊர்வலமாக எடுத்து வந்து ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கி கரைத்து உள்ளனர்.

இந்த விநாயகர் சிலையை கரைக்க அந்தியூர் தாலுகா, வேம்பத்தி பொதிய மூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கர் (18) என்பவரும், அவருடன் மேகநாதன், தம்பிராஜ், வேங்கைராஜ், ராஜா, ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களும் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி பார்த்து உள்ளனர்.

ஆனால் எங்கு தேடியும் சங்கர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம்? என்று கருதி உடன் வந்தவர்கள் ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் இரவு முழுவதும் சங்கரை தேடியுள்ளனர்.

பின்னர் இன்று காலை முதல் ஆப்பக்கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் இறங்கி கரைக்கும் போது பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News