தமிழ்நாடு

மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

Published On 2024-11-13 09:58 GMT   |   Update On 2024-11-13 09:58 GMT
  • மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்.

தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.

மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பிறகு,

மருத்துவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் சுயநினைவு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே, தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கத்தி குத்தால் தாக்கப்பட்டு கிண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கிண்டி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

Tags:    

Similar News