தமிழ்நாடு
null

காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2024-11-19 01:48 GMT   |   Update On 2024-11-19 01:49 GMT
  • தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
  • தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிங்கங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.

தஞ்சையில் கனமழை பெய்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்ட நிலையில் இன்று தலைமை ஆசிரியரே முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News