தமிழ்நாடு

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2024-11-11 15:04 GMT   |   Update On 2024-11-11 15:53 GMT
  • 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.

இதில், 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கும், சேலஞ்சர்ஸ் பிரிவில் மகுடம் சூடிய பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகப் புத்திசாலித்தனத்துடன், குறிப்பாக இறுதிச் சுற்றில், தீர்க்கமானதாக நிரூபித்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்திற்கு அவரது குறிப்பிடத்தக்க பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள்.

கிராண்ட் மாஸ்டர் பிரணவ்-க்கு கைதட்டல், சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது.

உலக செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் நிகழ்விற்காக தமிழக விளையாட்டுத் துறைக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News