தமிழ்நாடு
null
மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்..
- மாலை 5.30 மணிக்குத் தொடங்கி நள்ளிரவில் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே புயல் முழுமையாகக் கரையைக் கடந்துள்ளது
- புயல் கரையைக் கடந்தபோது புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதியில் கனமழை பெய்தது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே நள்ளிரவுக்குள் புயல் கரையை கடக்கும் என வானிமை மையம் கணித்தது.
அந்த வகையில் நேற்று மாலை 5.30 மணிக்குத் தொடங்கி நள்ளிரவில் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே புயல் முழுமையாகக் கரையைக் கடந்துள்ளது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 90 க.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடந்தபோது புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதியில் கனமழை பெய்தது. தொடர்ந்து புயலானது மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி அடுத்த 3 மணி நேரத்தில் மழை வலுவிழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.