தமிழ்நாடு (Tamil Nadu)

2026 தேர்தல் தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.. விஜய்க்கு முதல் ஆளாய் கிருஷ்ணசாமி வாழ்த்து

Published On 2024-10-27 16:13 GMT   |   Update On 2024-10-27 16:13 GMT
  • நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
  • தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

மேலும்  தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஸ்ணசாமியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வலுவான கொள்கை கோட்பாடுகள், அவற்றை அடைவதற்கான போராட்ட அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர  வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் துவங்கப்பட் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள்.! தமிழ்நாட்டில் டரு 75 வருடத்தில் வந்த அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்டபொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நான் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல் ஆட்சியிலும் அதிகாரந்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News