ஃபெஞ்சல் புயல்: விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீ. மழை பதிவு
- மரக்காணத்தில் 23.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
- தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், மரக்காணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
விழுப்புரத்தைத் தொடர்ந்து மரக்காணத்தில் 23.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் கடலூர், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகரந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.