தமிழ்நாடு

தனியார் பள்ளியில் வாயு கசிவு- அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு

Published On 2024-10-25 12:35 GMT   |   Update On 2024-10-25 12:35 GMT
  • பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்.
  • திருவொற்றியூர் மருத்துவமனையில் ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை.

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயக்கமடைந்த 3 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மருத்துவமனையில் குறைந்த படுக்கைகளே இருப்பதால், ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளியில் இருந்து மாணவர்களை திடீரென வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் மருத்துவமனையில் குறைந்த படுக்கைகளே இருப்பதால், ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில மாணவிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

பள்ளி அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, காலை 10.30 மணியில் இரு்நது வாயு நெடி வெறியேறிய நிலையில், உடனடியாக மாணவர்களை வெளியேற்றாதது ஏன் என பெற்றோர் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பளளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.

பள்ளி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை ஆணையர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 31 பேர் கொண்ட குழு பள்ளிக்கு வருகை தந்தனர். அங்கு, ரசாயன வாயு கசிவு பாதுகாப்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News