தமிழ்நாடு

லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2024-10-27 06:34 GMT   |   Update On 2024-10-27 13:27 GMT
  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
  • தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.

விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2024-10-27 12:48 GMT

தமிழக வெற்றிக் கழகம் - பெயர் விளக்கம் கொடுக்கும் வீடியோ மாநாட்டில் வெளியானது

2024-10-27 12:42 GMT

யார் பேரையும் சொல்லி தாக்குவதற்கு வரவில்லை - த.வெ.க. விஜய்

2024-10-27 12:36 GMT

திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள் - த.வெ.க. விஜய்

2024-10-27 12:36 GMT

உழைப்பு மட்டும் தான் என்னோடது, அதற்கு காரணமான எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் - த.வெ.க. விஜய்

2024-10-27 12:34 GMT

திராவிட இயக்கம் தெருவெங்கும் வளர்ந்ததே சினிமா மூலம் தான் - த.வெ.க. விஜய்

2024-10-27 12:31 GMT

த.வெ.க. மாநாட்டில் குட்டி கதை கூறி வருகிறார் தலைவர் விஜய்

2024-10-27 12:20 GMT

த.வெ.க. கொள்கைகள்: பெண்களுக்கு சட்டமன்றம் கல்விப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலம் முழுவதும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.

2024-10-27 12:19 GMT

த.வெ.க. கொள்கைகள்: போதையில்லா தமிழகம் என்பதே நமது கொள்கை. மக்களுக்கான ஜனநாயக நிலைநாட்டுவோம். நிர்வாகத்தில் அரசியல் தலையீடு எந்த விதத்திலும் இருக்கக்கூடாது. லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கிறோம்.

2024-10-27 12:18 GMT

த.வெ.க. கொள்கைகள்: மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை. தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

2024-10-27 12:17 GMT

த.வெ.க. கொள்கைகள்: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து மக்காளுக்கான ஜனநாயகத்தை மீட்போம். எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் சமம்.

Tags:    

Similar News