தமிழ்நாடு
டெல்டா மாவட்டங்களை நோக்கி நகரும் தாழ்வு மண்டலம்
- சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 830 கி.மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து 750 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
- இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையிலிருந்து தென்கிழக்கு திசையில் 630 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 830 கி.மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து 750 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.