தமிழ்நாடு
அமலாக்கத்துறை சோதனை - முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
- சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- தலைமை செயலகத்தில் இன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன் கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
முன்னதாக, தலைமை செயலகத்தில் இன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.