நீர்வளத்துறை பணிகளை 2025 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்- அமைச்சர் துரைமுருகன்
- நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மு.ஜானகி மற்றும் அனைத்து சென்னை மண்டல பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை:
நீர்வளத்துறை சார்பில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி பேசும்போது, 'தமிழ்நாடு முழுவதும் நீர்வளத்துறையின் மூலம் நடந்து வரும் அனைத்து அறிவிப்புப் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அத்துடன், நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், திட்ட இயக்குனர் கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், நீர்வளத்துறையின் அரசு கூடுதல் செயலாளர் சு.மலர்விழி, முதன்மைத் தலைமைப் பொறியாளர் சா.மன்மதன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மு.ஜானகி மற்றும் அனைத்து சென்னை மண்டல பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.