எல்லா ரேஷன் கார்டுக்கும் இல்லைங்க..!- பல்டி அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
- உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.
- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இதற்கு புதிய விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர்," விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது," வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.
இந்நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இதற்கு புதிய விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.