50 பைசாவை திருப்பித் தராத போஸ்ட் ஆபீஸ்.. ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்
- பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார்.
- 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார்.
50 பைசாவை திரும்பித் தராத போஸ்ட் ஆபீசுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காகச் சென்றுள்ளார். தபால் செலவாக ரூ.29.50 பைசா வந்துள்ளது.
ஆனால் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் Pay U யுபிஐ சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பழுதடைந்தால் 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார். ஆனால் டிஜிட்டல் பெண்மன்ட் பழுதாகி உள்ளதால் தபால் செலவு ரவுண்டாக ரூ.30 என்று கூறி மீதி சில்லறை தர மறுத்துள்ளார்.
எனவே இதனை எதிர்த்து அந்த நபர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனது சொந்த பணமான 50 பைசாவை இழந்து பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாக ரூ.15,000 வழங்கும்படி போஸ்ட் ஆபீசுக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.