தமிழ்நாடு
தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- சென்னை வானிலை ஆய்வு மையம்
- 23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும்.
- 24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை முதல் தொடர்ந்து பங்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தெற்கு பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இருப்பினும் ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று நள்ளிரவு வரை மட்டுமே பொருந்தும் என வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், நாகை, காரைக்காலுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.