ஆசிரியை குத்திக்கொலை விவகாரம்- பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
- பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.
- கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை உருவாக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி (வயது26) என்பவர் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், ஒரு தலை காதல் விவகாரத்தால், மதன்குமார் என்கிற இளைஞர் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் இருந்த ஆசிரியை குத்தி கொலை செய்யதார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிக்கு விடுமுறை குறித்து அறிவித்தார்.
மேலும் அவர், "பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். வேறு ஒரு இடத்தில் அவர்களுக்கு முழுமையாக கவுன்சிலிங் கொடுக்கப்படும்.
கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை உருவாக்கப்படும். அதன் பிறகே பள்ளி திறக்கப்படும்.