தமிழ்நாடு
முதலமைச்சர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம்
- பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
- அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தை குறைப்பது, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
புத்தகம், சீருடை, மிதிவண்டி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் மாணவர்களை சென்றடைந்ததா என ஆய்வு நடத்தப்படும்.
அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.