தமிழ்நாடு

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்களில் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும்- வானிலை மையம்

Published On 2024-11-26 06:50 GMT   |   Update On 2024-11-26 06:52 GMT
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்கன கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு நாட்களில் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கள் என வானிலை மையம் தகவல்.

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை- தமிழக கடலோர பகுதிகளை இரண்டு நாட்களில் நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் மழை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News