தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்-மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

Published On 2024-11-10 08:30 GMT   |   Update On 2024-11-10 08:30 GMT
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் ராமராஜ் ஆகியோரையும் பாராட்டினார்.
  • அறம் மற்றும் ஆசிரியர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக, விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், சிறந்த மாவட்ட கலெக்டர் விருது பெற மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் துறை பணியாளர்களை பாராட்டினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை உயர்த்தியமைக்காக 2024-ம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது பெற மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலர் அனிதா, முதன்மை கல்வி அலுவலர் அசோக்குமார் மற்றும் பணியாளர்களை பாராட்டினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அதிக அளவு பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்க சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்களை பாராட்டினார்.

விருதுநகர் மாவட்டம் மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருது பெற சிறப்பாக பணியாற்றிய கன்னிசேரிபுதூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன் ராஜ், வெப்பக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் செந்தட்டிகாளை, நரிகுடி வட்டார மருத்துவ அலுவலர் லஜா ஜெசிகா நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் ராமராஜ் ஆகியோரையும் பாராட்டினார்.

சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிலப்பதிகாரம் முற்றோதல் செய்த மாணவிகளுக்கு பயிற்சி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரிசல் இலக்கிய கழக தலைவர் ஜெயசீலன், அறம் மற்றும் ஆசிரியர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News