தமிழ்நாடு

த.வெ.க. மாநாடு: 2.30 மணி நேரம் படம் பார்த்த மாதிரி இருக்கு.. தமிழிசை

Published On 2024-10-27 14:25 GMT   |   Update On 2024-10-27 14:25 GMT
  • தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாட்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
  • த.வெ.க. தலைவர் விஜய்-க்கு பா.ஜ.க.வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. முதல் மாநில மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இரண்டரை மணி நேரம் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த மாதிரி இருக்கிறது. ஒரு பெரிய தரைப்படை உருவாகும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், ஒரு திரைப்படம் தான் உருவாகி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் தம்பி விஜய். முதலில் வாழ்த்துக்கள்."

 


"அங்குள்ள நல்ல விஷயங்களை முதில் கூறுகிறேன். நேர்மறை கருத்துக்களை சொல்கிறேன். போட்டியிடுவதில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு வழங்குவது, மிகப்பெரிய தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தியது. கடவுள் மறுப்பு கொள்கை எங்கள் கொள்கை இல்லை என்று சொன்னது. ஊழலுக்கு எதிராக நான் போராடுவேன் என்று சொன்னது, பனை மரத்தை மாநில மரமாகவும், பதநீரை மாநில நீராக அறிவிப்போம் என்று சொன்னது. வெற்றி பெற்று ஆட்சி வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று சொன்னது ஆரோக்கியமான சூழ்நிலையாக நினைக்கிறேன்."

"எதிர்மறை என்று பார்க்கும் போது, எங்களது எதிரிகளை நான் நிலைநிறுத்திவிட்டேன். சாதி, மத, இன, பாலின பாகுபாட்டை எதிர்க்கிறேன் என்று திருப்பி, திருப்பி கூறுகிறார்கள். அதில் அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. அப்படி சொல்லிவிட்டு, இதை எதிர்ப்பதால் எங்கள் கொள்கை எதிரியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்று மறைமுகமாக அவர் எங்களைத் தான் கூறுகிறார்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News