தமிழ்நாடு

அதானி விவகாரத்தை திசைத்திருப்பவே இசைவாணி விஷயத்தை பெரிதாக்குகிறார்கள்- திருமாவளவன்

Published On 2024-11-27 09:34 GMT   |   Update On 2024-11-27 09:34 GMT
  • பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
  • அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில், "முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், "கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

மேலும், திருமாவளவன் கூறியதாவது:-

மதத்தை அல்லது மத உணர்வுகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாடப்பட்ட பாடல் அல்ல. ஐயப்பன் துஇருக்கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்கிற சர்ச்சை எழுந்தபோது, ஒரு பெண்ணியக் குரலாக அந்த குரல், பெரியாரின் குரலாக அந்த குரல் இசையாக வெளிவந்து இருக்கிறதே தவிர அதில் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தக்கூடியதாக இல்லை.

அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டில் இதை பெரிதுப்படுத்துகிறார்கள்.

அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது. அவற்றை எல்லாம் திசைத்திருப்பவே இதுபோன்ற சிறு பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள் என்று கருதுகிறேன். அது ஏற்புடையது அல்ல.

இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்லுவது பொறுத்தமானது அல்ல. அது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News