தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்- திருநாவுக்கரசர்

Published On 2024-10-30 08:06 GMT   |   Update On 2024-10-30 08:06 GMT
  • அரசியல் கட்சி நடத்துபவர்கள் அந்த கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்று வந்தால் கூட்டணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
  • அதிகார பங்கை வைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதால் தான்.

மதுரை:

தேவர் ஜெயந்தி முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து புதிதாக மாநாடு நடத்தி இருக்கிறார். தமிழகத்தில் சிறந்த நடிகர்களில் நல்ல நடிகர் அவர். அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் விஜய் நடத்திய மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள்.

தற்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பணியாற்றி வருகிறோம். நடிகர் விஜய் கூட்டணியோ அல்லது அரசாங்கத்தில் பங்கு என்ற கோஷம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது தான்.

அரசியல் கட்சி நடத்துபவர்கள் அந்த கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்று வந்தால் கூட்டணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். காரணம் அந்த அதிகார பங்கை வைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதால் தான்.

ஆனால் பெரும்பான்மையாக ஒரு கட்சி வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

ஆனால் ஆந்திராவில் பெரும்பான்மை இருந்தாலும் பவன் கல்யாணத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருக்கிறார்கள். எனவே ஆட்சியில் பங்கு என்பது கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவு. அது வெற்றி பெறும் எண்ணிக்கையை பொறுத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது பறக்கும் படை பாலு, வெங்கட்ராமன்,மலர் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News