தமிழ்நாடு

எலி மருந்தால் நேர்ந்த விபரீதம் - மூச்சுத் திணறி 2 குழந்தைகள் உயிரிழப்பு

Published On 2024-11-14 13:36 GMT   |   Update On 2024-11-14 13:36 GMT
  • எலி மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவியுள்ளது.
  • இதனை சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலியைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்ட மருந்து காற்றில் பரவி, தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிதரன் என்பவர் தனது மனைவி பவித்ராவு மற்றும் விஷாலினி (6 வயது) சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய 2 குழந்தைகளுடன் குன்றத்தூரில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு எலி மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவியுள்ளது. இதனை சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

2 குழந்தைகளும் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில், பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த Pest Control நிறுவனம் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News