தமிழ்நாடு (Tamil Nadu)

த.வெ.க மாநாடு- டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவு

Published On 2024-10-27 05:11 GMT   |   Update On 2024-10-27 05:11 GMT
  • மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
  • டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், த.வெ.க மாநாட்டையொட்டி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கமாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில், இன்று திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News