- வைகோ தோள்பட்டையில் ஆபரேஷன் செய்தபோது பிளேட் வைக்கப்பட்டது.
- சிகிச்சைக்கு பிறகு வைகோ நலமுடன் இருக்கிறார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு தோள் பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார். பின்னர் இயல்பு நிலைக்கு வந்த வைகோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் அவரது தோள்பட்டையில் ஆபரேஷன் செய்தபோது பிளேட் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிளேட்டை வெளியே எடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும்.
அதன்படி தோள்பட்டையில் உள்ள பிளேட்டை அகற்றுவதற்காக வைகோ மீண்டும் நேற்றிரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மூலம் தோளில் வைக்கப்பட்ட 'பிளேட்' அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை இன்று நடந்தது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் அவர டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.