ஐடியாலஜியில் தெளிவில்லாமல் இருக்கிறார் விஜய் - எச்.ராஜா காட்டம்
- விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
- பலத்தரப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களும் , பொறுப்பாளர்களும் அவர்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
விழாவில் த.வெ.க கட்சியின் கொள்கை பாடல், கட்சியின் பெயர் விளக்க பாடலும் வெளியிடப்பட்டது. கட்சி கொடியை விஜய் ஏற்றி தொடங்கி வைத்தார். பொதுச் செயலலாளர் மற்றும் செயலாளர் த.வெ.க கட்சியின் கொள்கையை தெரிவித்தனர்.
விஜய் கட்சி விழாவில் மேடையில் ஏறி உரையாற்றுவதற்கு முன் அவரது தந்தை மற்றும் தாய் கட்டிப்பிடித்து ஆசிர்வாதத்தை பெற்றார். அதற்கு பின் மேடையில் ஏறி மாசாக ஸ்டைலாக பேசினார்.
இவர் பேசிய அரசியல் கொள்களைகளுக்கு பலத்தரப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களும் , பொறுப்பாளர்களும் அவர்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க ஒருகிணைப்பு குழு தலைவரான எச்.ராஜா அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " தமிழகத்தில் தேசியத்திற்கு ஆக்கம், ஊக்கம், தந்த பெரிய மகான்களான வ.உ.சி , பாரதி போன்ற நபர்களை குறிப்பிடவில்லை. ஒரு பக்கம் வீரமங்கை வேலு நாச்சியார் அவரோட புகைப்படத்த வச்சிருக்காரு. மறுப்பக்கம் 1944-ல் ஆன்கிலேயரை தமிழ்நாட்டை வீட்டு செல்ல கூடாது என போராட்டம் நடத்தி, லண்டனில் இருந்தாவது சென்னையை ஆளவேண்டும் என கோரிக்கை வைத்த ஈ.வெ.ரா புகைப்படத்தை வைத்துள்ளார். இதுல இருந்து என்ன தெரியுதுனா அவருக்கு ஐடியாலஜி ல தெளிவு இல்லாமல் இருக்கிறார். அவர் தெளிவு ஆகி பேசும் பொழுது இந்த பிரச்சனைகளை பற்றி பேசுவோம்.
இந்த நாட்டுல இருக்குற ஒரே மதசார்பற்ற கட்சி மதத்திற்கு ஒரு தனி சட்டம் கூடாது என நம்பிக்கை இருக்க கூடிய ஒரு பா.ஜ.க கட்சி ஆகும். எனவே அவர் எங்கள் சித்தாந்தத்தில் போட்டியாகவுள்ளார் என்றும் போட்டியாக முடியாது என நினைக்கிறேன்.
திராவிட கட்சி ஆன தி.மு.க வை விடவா மதவாத பிழவுவாத அரசியலை பா.ஜ.க செய்கிறது. தி.மு.க வின் மைய சிந்தனையே மொழி வெறுப்பு, சாதி வெறுப்பு, மாநில வெறுப்பு, இந்து வெறுப்பு தான அவங்களோட அடிப்படையே அதனால அவங்களோட வாக்கு பிரியுமே தவர. தேசியவாதி கட்சியான பா.ஜ.க என்றும் தேசியவாதிகளின் வாக்குகளை பிரித்துவிட முடியாது.