களைகட்டும் தீபாவளி பண்டிகை- மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- தீபாவளி முன்னிட்டு நேற்று முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.
பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் தீ விபத்து ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. அதனால், பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை, நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டியே ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அமாவாசையுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து குடிப்பெயர்ந்த மக்கள் அங்கு கொண்டாடுகின்றனர்.
வேலைக்காகவும், படிப்புக்காகவும் பல்வேறு மாநிலங்களுக்கு, நாடுவிட்டு நாடு சென்ற மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.