ரூமேனியாவில் அடுத்தடுத்து வெடி விபத்து: ஒருவர் பலி- 33 பேர் படுகாயம்
- நான்கு பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இரண்டாவது வெடிவிபத்தில் 26 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
ரூமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் உள்ள திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட இரண்டு வெடி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளனர்.
எரிவாயு நிலையத்தில் முதலில் ஏற்பட்ட வெடி விபத்திற்குப் பிறகு, தீ இரண்டு தொட்டிகள் மற்றும் அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியது.
இதனால் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இதனால் சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டதாக அவசரகால சூழ்நிலைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மற்றும் 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக ஐஜிஎஸ்யு தெரிவித்துள்ளது. நான்கு பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நேற்று மாலை எல்பிஜி நிலையத்தில் ஏற்பட்ட இரண்டாவது வெடிவிபத்தில் 26 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும், தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என்றும், அந்த இடத்தில் மூன்றாவது தொட்டி ஆபத்தை ஏற்படுத்தியதால் மேலும் வெடிப்புகள் நிகழலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.