செய்திகள்

இலங்கை போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - மந்திரி சபை ஒப்புதல்

Published On 2018-06-13 14:17 GMT   |   Update On 2018-06-13 14:17 GMT
இலங்கை போர்க்காலத்தில் படுகாயம் அடைந்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #Srilanka #Cabinet #CompensateWarVictims
கொழும்பு:

இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு இடையே கடந்த 30 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு இந்த போர் முடிவடைந்தது.

இதற்கிடையே, போர்க்காலங்களில் காணாமல் போனவர்கள், போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில்,  இலங்கை போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, இதுதொடர்பாக இலங்கை மந்திரி சபையின் செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னே கூறுகையில், போர்க்காலத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #Srilanka #Cabinet #CompensateWarVictims
Tags:    

Similar News