உலகம்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர்- உக்ரைன் அதிபர் சந்திப்பு
ரஷியாவின் அத்துமீறலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
கீவ்:
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உக்ரைனுக்கு சென்றுள்ளார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக நன்றி தெரிவிக்க வந்ததாகவும், போராட்டம் முடியும் வரை உக்ரைனுடன் இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
இருவரும் சந்தித்தபோது எடுத்த விடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷியாவின் அத்துமீறலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கடந்த மாதம் கீவ் சென்றது குறிப்பிடத்தக்கது.