null
2024 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூவர்!
- சர்வதேச சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது
- சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நாடுகளின் செழுமைகளுக்கு இடையிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருந்தானது வழங்கப்படுகிறது. ஜேம்ஸ் ராபின்சன் பிரிட்டனை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆவார் . சைமன் ஜான்சன் பிரிட்டன்-அமெரிக்க பொருளாதார வல்லுனர். மேலும் டாரன் அசோமோக்லு துருக்கி - அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஆவார்.
இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
மனித மூளையைப் போல இயங்க கணினிக்குக் கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.