உலகம்
கிளிமஞ்சாரோ சிகரத்தை 5 வயதில் ஏறி சாதனை படைத்த பஞ்சாப் சிறுவன்
- டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார்.
- இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று அவரது தந்தை தெரிவித்தார்.
தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும்.
ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டவர் என்ற சாதனையை பஞ்சாபை சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 18 அன்று கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற துவங்கிய டெக்பீர் சிங், ஆகஸ்ட் 23 அன்று, அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.
டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார். தனது மகனின் இந்த சாதனை குறித்து பேசிய அவரது தந்தை, "டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.