உலகம்

வங்கதேசத்தில் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா

Published On 2024-11-07 20:50 GMT   |   Update On 2024-11-07 20:50 GMT
  • வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
  • ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

டாக்கா:

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் கமால் உதின் அகமது மற்றும் 5 பேர் தங்களது ராஜினாமா கடிதங்களை அந்நாட்டு அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 3 மாதங்கள் கழித்து தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

2022-ம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தை அந்நாட்டு முன்னாள் அதிபர் அப்துல் ஹமித் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News