உலகம்

பிலிப்பைன்சில் புயல், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு

Published On 2024-10-26 22:21 GMT   |   Update On 2024-10-26 22:21 GMT
  • பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் டிராமி புயல் உருவானது.
  • இந்தப் புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டிப் போட்டது.

மணிலா:

பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் டிராமி புயல் உருவானது. இந்தப் புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டிப் போட்டது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல மாகாணங்களில் கனமழை கொட்டியது. பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் பல வீடுகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் டிராமி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகினர்.

நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News