உலகம்

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ முடிவு

Published On 2024-02-12 03:45 GMT   |   Update On 2024-02-12 05:57 GMT
  • நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி.
  • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், நேற்றுதான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.

மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதை இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு 128 இடங்கள் உள்ளன. இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

அரசியல் உறுதியற்ற நிலையில் பாகிஸ்தானை காப்பாற்ற கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன. நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கா அரசியல் ரீதியிலான ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

Tags:    

Similar News