உலகம்
போர் எதிரொலி - 2வது முறையாக இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க வெளியுறவு மந்திரி
- காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் ராணுவ மந்திரி ஆகியோர் கடந்த மாதம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார்.
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை அமெரிக்கா தொடர்ந்து அளிக்கும் என தெரிவித்தார்.