உலகம்

சுனிதா வில்லியம்ஸ் உடன் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி புறப்பட்டது

Published On 2024-06-05 15:35 GMT   |   Update On 2024-06-05 15:35 GMT
  • ஸ்டார்லைனர் பயணம் இரண்டு முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.
  • இன்று பயணத்தை தொடங்கிய நிலையில் நாளை விண்வெளி நிலையத்தை அடையும்.

போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருந்தனர்.

ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பயணம் தடைபட்டது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸை சுமந்து கொண்டு விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டது.

25 மணி நேர பயணத்திற்குப் பிறகு வியாழக்கிழமை (நாளை) அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது 3-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதன் பயணம் இதுவாகும். கடந்த 2019-ம் ஆண்டு விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் சோதனைக்கு உட்படுத்தபட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 2022-ல் சோதனை வெற்றி பெற்ற நிழையில் பாராசூட் உள்ளிட்ட சில பிரச்சனைகள் உருவாகின.

இந்த நிலையில்தான் இரண்டு முறை முயற்சி தோல்வியடைந்த நிலையில் 3-வது முயற்சியில் வெற்றிகரமாக பறந்துள்ளது.

Tags:    

Similar News