உலகம்

போர்நிறுத்தம் என்பது ஹமாசிடம் சரணடைவது போன்றது, அது நிச்சயம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர்

Published On 2023-10-31 00:46 GMT   |   Update On 2023-10-31 00:46 GMT
  • காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது.
  • இது போருக்கான நேரம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

டெல் அவிவ்:

தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேசியதாவது:

காசாவில் போர்நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக நாம் போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் பயங்கரவாதத்திற்கு சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை. ஆனால் இந்தப் போரில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். வெற்றி வரும் வரை இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக நிற்கும்.

பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா போர்நிறுத்தத்திற்கு உடன்படாதது போல, அக்டோபர் 7-ம் தேதி பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு ஹமாசுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.

போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது.

இஸ்ரேல் இந்த போரை தொடங்கவில்லை. இஸ்ரேல் இந்த போரை விரும்பவில்லை. ஆனால் இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News