உலகம் (World)

வான்கூவரில் இந்திரா காந்தி படுகொலை போஸ்டர்கள்: கனடா மந்திரி கண்டனம்

Published On 2024-06-09 12:57 GMT   |   Update On 2024-06-09 12:57 GMT
  • இந்திரா காந்தியை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றதை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
  • இதுதொடர்பாக கனடா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி. வலியுறுத்தினார்.

ஒட்டாவா:

கனடாவின் வான்கூவரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, கனடா நாட்டின் பொது பாதுகாப்பு, ஜனநாயக அமைப்புகள் மற்றும் வெளிவிவகார மந்திரி டொமினிக் லெப்லாங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வாரம் வான்கூவரில் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. கனடாவில் வன்முறையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி எம்.பி.யான சந்திரா ஆர்யா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக கனடா அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர்கள் கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News